புகையிலை விற்றவர் மீது வழக்குபதிவு ரூ.25 ஆயிரம் அபராதம்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக  மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர். கலைவாணி ஆலோசனையின் பேரில் நத்தம் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள். ஜாபர் சாதிக் மற்றும் செல்வன் ஆகியோர் இணைந்து இரவு நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் சாலையில் உள்ள அய்யனார்புரத்திலுள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி பகுதியில் அழகர்சாமி என்பவர் புகையிலைப் பொருட்களை வீட்டில்  பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்ததை தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது  அவரிடமிருந்து 5 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!