சென்னையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எப்.ஐ 25-ஆவது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டிகளில், கோவையை சேர்ந்த, ஸ்வஸ்திகா ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி யை சேர்ந்த 12 வயது வீரர் ரியான் கலந்து கொண்டு இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வாங்கி சாதனை!!


சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில், உள்ள, ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில், இந்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் சம்மேளனம் சார்பில் 25-ஆவது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த ஜனவரி மாதம், 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை, நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 24 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கோவையை ஸ்வஸ்திகா ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி யை சேர்ந்த 12 வயது வீரர் ரியான், கலந்து கொண்டு, 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், 2 தங்கப் பதக்கங்களையும், 1 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன், 

12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்றதுடன், தனிநபர் சாம்பியன்ஷிப் கோப்பையையும் கைப்பற்றினார். மேலும், சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்காகவும் ரியான் தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக 400 மீட்டர் போட்டியில், தங்கமும்,  200 மீட்டர் பிரிவில், வெள்ளியும்,  ரிலே பிரிவில், தங்கமும் வென்று சாதனை படைத்தார் அவ்வாறு சாதனை படைத்த மாணவருக்கு கோவையில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மாணவரின் வெற்றிக்கு அயராது பாடுபட்டு பல்வேறு பயிற்சிகளை வழங்கிய ஸ்வஸ்திகா ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி பயிற்சியாளர்கள், சத்யா, பிரகாஷ், பிரசாந்த், ஆகியோருக்கும், வெற்றி பெற்ற மாணவருக்கும், அகாடமியில் பயிற்சி பெறும் சக மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!