சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் டிவிஎஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற வளாக நேர்காணல்: 21 மாணவர்கள் தேர்வு!!


புதுக்கோட்டை மாவட்டம், அரசம்பட்டியில் உள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவின் சார்பில் டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகள் நிறுவனம் நடத்திய மாபெரும் வளாக நேர்காணல்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆண்ட்டோ அலோசியஸ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் குழ. முத்துராமு தலைமை உரை ஆற்றி, மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். சென்னை டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகள் நிறுவனத்தின் மண்டல மேலாளர் வெங்கட கிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த நேர்காணலில் மன்னியல் மற்றும் மின்னணுவியல் , மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் இயந்திரவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த மொத்தம் 60 மாணவர்கள் கலந்துகொள்ளத் தகுதி பெற்றனர். அவர்களில் 51 மாணவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்வின் இறுதியில், இயந்திரவியல் துறையிலிருந்து 15 மாணவர்கள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையிலிருந்து 5 மாணவர்கள் மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் துறையிலிருந்து ஒரு மாணவர் என மொத்தம் 21 மாணவர்கள் சிறந்த முறையில் செயல்பட்டுத் தேர்வாகினர்.

​தேர்வு செய்யப்பட்ட இந்த 21 மாணவர்களும் போர்க்வார்னர் கூலிங் சிஸ்டம்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களைக் கல்லூரி  தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன், இயக்குநர் (நிர்வாகம்) ம.பிச்சப்பா, செயலாளர் மு.விஸ்வநாதன்  மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் முனைவர் அ. முத்து மாணிக்கம் நன்றியுரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!