மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் மாபெரும் அரங்கா- 2026 கலை நிகழ்ச்சி – பிரபல கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு!!

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் சார்பில் கல்லூரி திறந்தவெளி அரங்கில்  மாபெரும்   அரங்கா 2026 கலை நிகழ்ச்சி  கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்வி குழுமத்தின் நிறுவனர் டாக்டர். இரா.சின்னதம்பி அவர்கள்  தலைமை தாங்கினார். தாளாளர். ஆர். சி .உதயகுமார்  முன்னிலை வகித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினராக   விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் .சி. விஜயபாஸ்கர் மற்றும் அவர்களது  துணைவியார். ரம்யா விஜயபாஸ்கர் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கவிஞர் தங்கமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவிற்கு  முதன்மை விருந்தினராக பிரபல திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.   தொகுப்பாளர்களாக ஜெய் மற்றும் பொன்வாணி,   பாடகர் கானா பூமணி, பாடகி  ரேஷ்மா ஷாம், பாடகி  மானசி,  நடனக் கலைஞர்  தனுஷ், மற்றும் நடனக் கலைஞர் சிப்பு சிப்பி ஆகியோர் கலந்து  கொண்டு 30 மேற்பட்ட பாடல்களை பாடியும், ஆடியும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி,  தொழில்நுட்ப கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, உடற்கல்வியியல் கல்லூரி, கேட்ரிங் கல்லூரி, சட்டக் கல்லூரி, பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் ஃபிசியோதெரபி கல்லூரி மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் முதல்வர்கள் பேராசிரியர்கள்  ஆசிரிய அலுவலகர்கள் விழாவில் கலந்து  கொண்டனர்.

 பிரபல கலைஞர்களின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் மாணவர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியது. முழு மைதானமும் கைதட்டலும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழலாக காணப்பட்டது.

இந்த  அரங்கா 2026 கலை நிகழ்ச்சி மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததுடன், கல்வியுடன் கலையும் முக்கியம் என்பதைக் எடுத்துக்காட்டியது.

இந்த விழாவை பிரபல தொகுப்பாளர். ஜெய் மற்றும் பொன்மணி அவர்கள் தொகுத்து  வழங்கினார்கள். இதில் கல்வி நிறுவனங்களின் பதிவாளர். மு.தினேஷ்குமார் இயக்குனர். திருமா. பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்சிகளை நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி பிரிவுத்தலைவர் . நிஷிதா உதயகுமார் தலைமையில் பாலாஜி ,வித்யா மற்றும் உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் செய்திருந்தனர். விழாவின் இறுதியில் நன்றியுரை வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!