குடியாத்தத்தில் நடைபெற்ற மத்திய அரசு அறிவித்துள்ள 2026& 27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டம்!!
வேலூர் மாவட்டம், மத்திய அரசு அறிவித்துள்ள 2026& 27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டம் தமிழக பிஜேபியின் பட்டியல் அணி சார்பில் குடியாத்தம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பட்டியல் அணி மாநில துணை தலைவர் கேஜி குட்டி கலந்து கொண்டு பட்ஜெட் குறித்து விளக்க உரையாற்றினார். பட்டியல் இன மக்களுக்காக பல்வேறு சலுகை திட்டங்களையும் பொதுவான கல்வி திட்டத்திற்கும் அளிக்கப்பட்ட மத்திய அரசின் நிதி குறித்தும் பல லட்சம் கோடி நிதியினை மாநில திமுக அரசு பட்டியல் இன மக்களுக்காக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது குறித்தும், அனைவருக்கும் சமமான கல்வி பட்டியல் இன மக்களுக்கான கட்சியில் அளிக்கப்பட்டுள்ளபொறுப்பு அதனுடன் சேர்ந்து அமைச்சரவையில் பதவிகள் உள்ளிட்ட சலுகைகள் முன்னுரிமைகள் ஆகியவற்றை குறித்து விளக்கிப் பேசினார்..
மாவட்ட பட்டியல் அணி தலைவர் மதன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பட்ஜெட் குலத்த கூட்டத்தில் மாவட்ட பிஜேபி பொதுச் செயலாளர் சாய் ஆனந்த் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநில ஊடகப்பிரிவு நந்தகுமார், மாவட்ட பேச்சாளர் செந்தில்குமார், மண்டல தலைவி பிரீத்தி உட்பட இந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பிற பொறுப்பாளர்கள் மற்றும் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் செய்தியாளர் கேவிஆர்.


கருத்துகள்
கருத்துரையிடுக