கோவையில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பணம் கேட்டு மிரட்டிய மாணவர் கைது!!
கோவை: கோவையில் காதலிகளின் உதவியுடன் ஏஐ செயலிகள் மூலம் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாச மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பணம் கேட்டு மிரட்டிய மாணவரை மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களின் மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். இங்கு 2 ஆம் ஆண்டு படித்து வரும் 2 மாணவர்கள் அதே கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகளை காதலித்து வருகின்றனர். இதையடுத்து, 4 பேரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். இதனால், அவர்களுக்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டு வந்துள்ளது. எனவே தற்போது வளர்ந்து வரும் டெக்னாலஜி AI மூலம் 20 க்கும் மேற்பட்ட மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.இது குறித்த விசாரணை கோவை மகளிர் காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர் .
கோவை மாவட்ட செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக