போடி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் இரண்டு பல்நோக்கு அரங்குகள் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை!!

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கழக தலைவர் திராவிட நாயகர் அவர்கள் மாண்புமிகு துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் அவர்கள் வழிகாட்டுதலின்படி 

தேனி நாடாளுமன்ற உறுப்பினர்,தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர்.தங்கதமிழ்செல்வன்" M.P அவர்கள் தலைமையில் போடி அரசு பொறியியல் கல்லூரியில்1.40 கோடி மதிப்பீட்டில் இரண்டு பல்நோக்கு அரங்குகள் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது 

கல்லூரியின் முதல்வர் முனைவர். வசந்தநாயகி அவர்கள் மேலசொக்கநாதபுரம் பேரூர் மன்ற தலைவர்.கண்ணன் காளி ராமசாமி  அவர்கள் போடிநாயக்கனூர் நகராட்சியின் நகர் மன்ற தலைவர். ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!