கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 13ம் ஆண்டு துவக்கவிழா!!

கோவை!மாவட்டம்,கோவை கணபதி, சங்கனூர் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் 13ம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து சமூகத்தில், பல்வேறு துறைகளில் இருந்து பல்வேறு சாதனைகள் படைக்கும் சாதனையாளர்களுக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கபட்டது.

விழாவிற்க்கு கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான சுக்ருல்லா பாபு, தலைமை தாங்கினார்..

தொடர்ந்து ஒவ்வொரு துறைகளிலும் சமூக பணிகளை முன்னெடுத்து, பொதுமக்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டி விருதுகள் வழங்கபட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கத்தின் துணை தலைவர் விஜய் விநாய்க், துணைச்செயலாளர் 

சதிஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான், மற்றும்  சரவணன், மொகரூர் பாஷா,

ஜி.டி.ஜாபர்அலி, தாஜ்முகம்மது, அப்துல்லா, ஓமர்ஷெரீப், லோகேஷ், ஜெயன், சீனிவாசன், ஷாஜஹான், எம்.ஐ. 

முஹம்மது அலி, ஹாஜியார், மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மக்கள் நல்லுறவு நலச்சங்கத்தின் உறுப்பினர்கள், செயல்வீரர்கள், ஆட்டோ நண்பர்கள்,

மதிமுக ஷாஜகான், மக்கள் முன்னேற்ற கழகம் அக்பர் ஷெரிப், தளபதி பாபு, நீயு கிரெசண்ட் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!