குடியாத்தத்தில் 12.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி தமிழக முதல்வர் காணொளி மூலமாக திறப்பு!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் 12.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர் தேக்கு தொட்டி கட்டி முடிக்கப்பட்டு நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர். சுப்புலட்சுமி IAS அவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த மாலா (வயது 50) என்ற பெண் அருகே இருக்கும் சில நபர்கள் கஞ்சா போதையில் பிரச்சனை செய்வதாகவும் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் கண்ணீருடன் ஆட்சியர் காலில் விழுந்து புகார் மனுவை கொடுத்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அங்கிருந்த காவல்துறையினரை அழைத்து இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாலைக்குள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லை என்றால் நான் குடியாத்தம் டி எஸ் பி அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்டவருடன் வந்து அமர்ந்து விடுவேன் என மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகளிடம் கடுமையாக எச்சரிக்கை செய்தார் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக