இலுப்பூர் மதர்தெரசா சட்டக்கல்லூரியில் POSH விழிப்புணர்வு கருத்தரங்கம்!!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர்தெரசா சட்டக் கல்லூரியில் "An Overview of The POSH Act, 2013 என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு மதர்தெரசா கல்விநிறுவனத்தின் நிறுவனர் இரா.சின்னதம்பி ஐயா, தலைமைதாங்கினார். தாளாளர் ஆர்.சி.உதயகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.மதர்தெரசா சட்டக்கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் வரவேற்புரை வழங்கினார் கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி.சி.கார்த்திகா அவர்கள் கலந்துகொண்டு பேசுகையில் பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து தடுக்கும், தடை செய்யும் மற்றும் தீர்வு காணும் சட்டம் 2013 வகைமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யும் முறை, புகார் செய்வதற்கான அமைப்புகள், செயல்பாடுகள் மற்றும் தீர்வழிகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் பதில் அளித்தார்கள் நிகழ்வில் பதிவாளர் மு. தினேஷ்குமார், இயக்குனர்

திருமா. பூங்குன்றன்

மற்றும் 200 மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் என்.எம்.நவ்ஷாத் அலி, உதவி பேராசியர்கள் ஏ.அபுதாகிர் மற்றும் எஸ்.சுபாஷினி உள்ளிட்டோர் செய்திருந்தனர் விழா நிறைவில் துணை முதல்வர் என்.எம்.நவ்ஷாத் அலி நன்றியுரை வழங்கினார். எல்.எல்.பி. இரண்டாம் ஆண்டு மாணவர் முஜிபுர் ரஹ்மான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!