கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா! ஜெயக்குமார் IPS பங்கேற்பு!!


கடலூர் மாவட்டம்,தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS அவர்களின் முன்னிலையில்  ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். 

காவல் கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உறியடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்ற கோலப் போட்டியில் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு, போதைக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, கடலூர் மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்த  கோலங்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள். N. கோடீஸ்வரன்  V. ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள். S. தமிழ் இனியன் A. மனிஷா,  P. அப்பாண்ட ராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர். சுரேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!