அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த ஜெ.யு.சந்திரகலா IAS !!
இராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருமான வரித் துறை ஆணையரகம், சென்னை சார்பில் வருமானம் வரிபிடித்தம் குறித்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் வருமான வரி கூடுதல் ஆணையர் பிரவீன் IRS, சென்னை அவர்கள் முன்னிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் அனைவருக்கும் வருமான வரி பிடித்தம், 24Q, 26Q ஆகிய படிவங்கள் சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் வருமான வரித்துறை அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வருமான வரி கூடுதல் ஆணையர் பிரவீன் IRS, வருமான வரி அதிகாரிகள் சாந்தி, ராமபிரபா திருமாறன், பரமேஷ்வரி, மாளவிகா வெங்கடேஷ், நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக