தேசிய ER லத்தி போட்டியில் திட்டக்குடி மாணவி கனிஷ்கா குமார் சாதனை – வெள்ளி பதக்கம் வென்று பெருமை!!

தமிழ்நாட்டு பாரம்பரிய லத்தி போட்டியில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி ஸ்ரீ ஞானகுரு பள்ளியைச் சேர்ந்த மாணவ–மாணவிகள், தமிழ்நாடு மண்டல பாரம்பரிய லத்தி போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சிறப்பான சாதனை படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, 28 மற்றும் 29 தேதிகளில் மத்தியப் பிரதேசம் மற்றும் அந்தமான் தீவுகளில் நடைபெற்ற தேசிய அளவிலான ER லத்தி போட்டியில் (சிறுமியர் பிரிவு) கலந்து கொண்ட திட்டக்குடியைச் சேர்ந்த

தெய்வத்திரு திராவிட மணி அவர்களின் பேத்தியும், குமார் அவர்களின் மகளுமான கனிஷ்கா குமார், தன் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெள்ளி பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

இந்த சாதனையையொட்டி, விடுதலை சிறுத்தை கட்சி – திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன், மாணவி கனிஷ்கா குமாருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,கட்சிநிர்வாகிகள்திட்டைநகர் பொறுப்பாளர் பிரேம் (எ) மகேந்திரன்,சுபாஷ், 5-வது வார்டு கிளைச் செயலாளர் பிரதாப் வரபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!