திண்டிவனத்தில் குர்ஆன் விழிப்புணர்வு பிரச்சாரம் விக்கிரவாண்டி அதாயி மதரஸா ஆலிம் மாணவர்கள் பங்கேற்பு!!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இயங்கி வரும் அதாயி மதரஸாவில் ஆலிம் பட்டம் பெறும் மாணவர்கள், இறைவன் படைத்த திருக்குர்ஆன் வேதத்தின் நோக்கங்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து இஸ்லாமிய பெருமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டிவனத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, திண்டிவனம் மஸ்ஜிதே தாருஸலாம் பள்ளிவாசலில் 21.1.2026 புதன்கிழமை மக்ரிப் தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை இமாம் முஹம்மத் ஹாருன் அவர்களின் தலைமையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

அதேபோல், 22.1.2026 வியாழக்கிழமை திண்டிவனம் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசலில் இமாம் முஹம்மத் ஜாவிது அவர்களின் தலைமையில் மற்றொரு விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி அதாயி மதரஸாவில் ஆலிம் பட்டம் பெறும் மாணவர்கள், அப்துல் வஹாப் அவர்களின் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவாக கலந்து கொண்டு திருக்குர்ஆன் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்களும், மௌலானா மௌலவி ஹாஜி சுல்தான் இப்ராஹிம் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகிகள், மாணவச் செல்வங்கள் மற்றும் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சிறப்பு செய்தியாளர் டாக்டர்.நடராஜன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!