தேனி பெரியகுளம் வி நி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!!
தேனி பெரியகுளம் வி நி அரசு மேல்நிலைப்பள்ளியில் 87-88,88-89, ஆண்டுகளில் மேல்நிலை வகுப்பில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு இயற்கையான சூழல் நிறைந்த மாந்தோப்பில் நடைபெற்றது சுமார் 70 மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் வரவேற்பு அளிக்கப்பட்டு இனிப்பு காரம் காபி வழங்கப்பட்டது லோகோ பொறித்த டி-ஷர்ட் வழங்கப்பட்டு அதனை அனைவரும் அணிந்து கொண்டனர் பள்ளி பருவ காலத்தை நினைவில் கொள்ளும் விதமாக வரிசையாக நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடி உறுதிமொழி ஏற்க பட்டு நாட்டுப்பண் பாடப்பட்டது அனைவரும் பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் .மதியம் அசைவ விருந்து மற்றும் சைவ விருந்து உபசரிப்பு நடைபெற்றது பின்னர் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர் அனைவரும் நிகழ்வினை எண்ணி பிரியாவிடை பெற்றனர் நிர்வாக குழுவினர் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக