ஐயப்ப பக்தர்கள் சாலை விபத்தில் இருவர் பலி!!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த எட்டு பேர் ஐயப்பன் கோவிலுக்கு சபரிமலை பாதயாத்திரை சென்றனர். இரவு அருள்மிகு வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் தங்கி விட்டு காலை 4 மணிக்கு மீண்டும் நடைப்பயணத்தை தொடங்கியுள்ளனர் தேனி, கம்பம் நெடுஞ்சாலையில் சீலையம்பட்டி அருகே திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களை ஏற்றிச்சென்ற வேன் பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது மோதியதில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த குமார் வயது 55 ,ராம்கி 36 வயது ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சின்னமனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குமார், ராம்கி இருவரின் உடலையும் கைப்பற்றி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பந்தமாக வேனை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த கந்தசாமி மகன் தினேஷ் குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் இருவர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக