ஆற்காடு தொகுதியில் அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் A.V. சாரதி சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் இதில் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சிகள் அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கு இந்த முயற்சி உதவும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக