திருமலைக்கேணியில் நடைபெற்ற சஷ்டி விழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாத சஷ்டி விழா நடந்தது. இதில் முருகபெருமானுக்கு பால்,பழம்,பன்னீர்,விபூதி,சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவா தரிசனம் செய்தனர்.இதைபோல நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக