நெமிலி அருகே எஸ் கொளத்தூரில் விளையாட்டு திடல் அமைத்துக் கொடுத்த ஒன்றிய செயலாளர். எஸ். மணிவண்ணன்!!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த (நெல்வாய் ஊராட்சி) எஸ் கொளத்தூர் கிராமத்தில் விளையாடுவதற்கும்  மற்றும் உடற்பயிற்சி  செய்வதற்கும், ஈஸ்வரன் கோவில் அருகில் ஒரு சிறிய இடம் உள்ளது.அந்த இடத்தை  சரிசெய்து விளையாடுவதற்கும்,பொழுதுபோக்கு கழிப்பதற்கும்,உடற்பயிற்சி செய்வதற்கும் பயன்படும் விதமாக கோவில் நிர்வாக அதிகாரிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து எஸ் கொளத்தூர் கிராமத்து இளைஞர்கள் அந்த இடத்தில் விளையாட்டு திடல் வேண்டும் என்று நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். எஸ். மணிவண்ணன் அவர்களிடம் சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். எஸ். மணிவண்ணன் அவர்கள் இளைஞர்களின் நலன் கருதி எஸ் கொளத்தூர் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைத்திட ஜேசிபி இயந்திரம் மூலம் சீர் செய்து விளையாட்டு திடல் அமைத்து கொடுத்தார். 

இந்த நிகழ்வில் நெமிலி வடக்குஒன்றியதிமுக பொருளாளர். நந்தகோபால், நெமிலி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். விஜய், நெமிலி வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர். சூர்யா, மற்றும் கிளை கழக செயலாளர். ஆர். ரமேஷ், கிளைகழக மாணவர் அணி அமைப்பாளர். பவித்ரன் மற்றும் துணை அமைப்பாளர்கள். சுரேஷ், கந்தன் திமுக கழக நிர்வாகிகள். துரைசாமி, வெங்கடேசன், குமரவேல், பாலு, பாகம்அமைப்பாளர்கள். சதீஷ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

 குறிப்பு : விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு காணும் பொங்கலுக்கு விளையாட்டு பொருட்கள் நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். எஸ். மணிவண்ணன் அவர்கள் தலைமையில் வழங்கப்படும்_ விழா குழுவினர்.

விளையாட்டு மற்றும் நன்கொடை தொடர்புக்கு.போன்: 6369759600

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!