வீரபாண்டி கோவில் ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்!!..
விழுப்புரம் மாவட்டம்,தை அமாவாசையை முன்னிட்டு இன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தினர். புண்ணிய ஸ்தலம், முக்கிய நீர் நிலைகள் என இதற்காக பொதுமக்கள் அதிகம் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் செல்லும் முல்லைப்பெரியாறில் இன்று தர்ப்பணம் கொடுப்பதற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆன்மீக ஸ்தலமாக வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் கருதப்படுவதால் கோவில் அருகே செல்லும் முல்லைப்பெரியாற்றில் தை அமாவாசையை ஒட்டி பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
விழுப்புரம் செய்தியாளர் விஜய்.


கருத்துகள்
கருத்துரையிடுக