ஆற்காடு அருகே பூங்கோடு ஸ்மைல்ஸ் இந்தியா வித்யாசாரம் பள்ளியில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கோலாகலம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூங்கோடு கிராமத்தில் உள்ள ஸ்மைல்ஸ் இந்தியா வித்யாசாரம் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளராக உழவன் பாலு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் பள்ளி தாளாளர் ஜீவராஜி அனைவரும் வரவேற்று பேசினார் மாணவர்கள் படைத்த கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் போகிக்கு அடையாளமாக மதயானைக் கழிதலும் புதியன புகுதலும் என்ற தலைப்பில் பழைய பொருட்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து புது பானையில் பொங்கல் வைத்து பொங்கி வந்த போது பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடினர் தொடர் நிகழ்வாக மாடுகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்யப்பட்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது மேலும் காணும் பொங்கலுக்கு அடையாளமாக பெரியோர்களுக்கு மதிப்பு மரியாதை செய்யும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சி இறுதியில் நந்தகோபால் சிறப்புரையாற்றினார் பள்ளியில் நிகழ்ச்சி நேரலை முதல்வர் ஜான் லாரன்ஸ் நன்றி கூறினார்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்

கருத்துகள்
கருத்துரையிடுக