தேனியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!!

தேனி மாவட்டம், தேனியில் (நாடு முழுவதும்) ஆண்டுதோறும் ஜன. 1-ம் முதல் 31-ம் வரை ஒரு மாதம் தேசிய சாலை பாதுகாப்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் ரோட்டில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் மற்றும் ஹெல்மெட் அணிதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன, மாவட்ட வருவாய் அலுவலர். ராஜகுமாரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர். சினேஹபிரியா IPS அவர்கள் கொடியசைத்து  பேரணியைத் தொடங்கி வைத்தனர். 

வாகனப் பேரணி: தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து தொடங்கிய இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையம் அருகில்  மைதானத்தில் முடிவடைந்தது.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.

தேனி புதிய பஸ் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, சாலை விதிகள் விளக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகளில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது

இதில் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

 தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!