ராணிப்பேட்டையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி : சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டையில் சத்துணவு ஊழியர்கள் 43 ஆண்டுகால வாழ்வாதார கோரி தேர்தல் காலத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்டத் துணைத் தலைவர் கலைச்செல்வி தலைமையில் முத்துக்கடையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர். எழில் இளம்பழுதி, மாவட்ட செயலாளர். பர்சில வான சாஸ்திரி, ஊரக வளர்ச்சி மாவட்ட செயலாளர் பூபதி, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். ராஜசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
இதில் சிஐடியு மாவட்ட செயலாளர். ஆ. தவராஜ், மாநில தலைவர் எஸ். முரளி தாஸ், மாவட்ட செயலாளர். கீதா, பொருளாளர். தீபா மற்றும் மாவட்ட நிர்வாகிகள். ஹேமலதா, சித்ரா, பிரபா உள்ளிட்ட திரளான சத்துணவு ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக