கோவை ரயில் நிலையம் பகுதியில் தமிழ்நாடு கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வு கூட்டம் !!

கோவை மாவட்டம்,தமிழ்நாடு கிறிஸ்தவ கூட்டமைப்பின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் கோவை ரயில் நிலையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு கிறிஸ்தவ கூட்டமைப்பின் மாநில தலைவர். விசவனூர் தளபதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விழிப்புணர்வு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை பொருப்பாளர். டென்ஸ்டன் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது..

நடைபெற உள்ள 2026 சட்ட மன்ற தேர்தலில், கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ள கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக அரசியல் கட்சிகள் சுமார் 10 விழுக்காடு கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கி தர வேண்டும், தமிழக சட்ட பேரவையில் பல காலம் நடைமுறையில் இருந்த கிறிஸ்தவ நியமன உறுப்பினர் முறையை மீண்டும் கொண்டு வர அரசியல் கட்சிகளுக்கு வலியுருத்துவதாகவும், தேவாலயங்கள் கட்ட எந்தவித சிறப்பு விதிகளும் விதிக்க கூடாது, தேவாலய வழிபாடுகள் மீது அத்துமீறும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒன்றியங்கள் தோறும் கிறிஸ்தவங்களுக்கு கல்லறைத்தோட்டங்கள் ஏற்படுத்தி தர வேண்டும், எஸ். இ. எஸ். டி மக்கள் கிறிஸ்தவ சமூயத்திற்க்கு மாறும் போது அவர்களது உரிமைகள் மறுக்க படும் சட்டத்தை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவதுடன், கிறிஸ்தவ சமயத்திற்க்கு மாறும் எஸ்இ எஸ்டி மக்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது போன்ற 7 அம்ச கோரிக்கைகளை இந்த கூட்டத்தின் வாயிலாக, கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம், 

தமிழ்நாடு கிறிஸ்தவ கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர், துரை அருள் தாஸ், துணைத்தலைவர் ஆரோக்கிய சதிஷ், உதவி தலைவர் கோவை ஜேம்ஸ், இணை செயலாளர். ஜேம்ஸ், ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!