மதுரை ஜெ. ஏ. எம் மகளிர் கல்லூரி சார்பாக சமர்ப்பண விழா!!
மதுரை ஜெ.ஏ.எம். மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக மகபூப்பாளையம் கல்லூரி வளாகத்தில் 6.9 லட்சம் ஸலவாத் சமர்ப்பண விழா, உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிரார்த்தனை விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி மௌலானா மௌலவி S.M.முஹம்மது அல்தாப் அலி உலவி தலைமையேற்றார், கல்லூரியின் கண்காணிப்பாளர் S.A. முஹம்மது அலி முன்னிலை வகித்தார், விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கண்ணியமிகு மதுரை கருப்பாயூரணி உம்மு ஹபீபா பெண்கள் அரபுக் கல்லூரியினுடைய நிறுவனர், முன்னாள் துணை ஆட்சியர் அபுல் கலாம் ஆசாத் ஹாஜியார் அவர்களும் அவர்களுடைய மகனார் கண்ணியமிகு A.அம்ஜத் இப்ராஹிம் (கேம்ப் குவைத்) அவர்களும் துபையிலிருந்து வருகை தந்த ஷேக் மாலிக் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அனைவர்களையும் நிர்வாகத்தின் சார்பாக கண்ணியப்படுத்தப்பட்டது. இறுதியாக நமது கல்லூரியின் தலைமை ஆசிரியை அஃப்லலுல் உலாமா ஆலிமா M.சுமையா பர்வீன் அவர்கள் நிறைவான துஆவோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நமது கல்லூரியினுடைய மாணவிகள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக