ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு நகர செயலாளர். கே. பி. சந்தோசம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர். எஸ். எம். சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவில் நிர்வாகிகளிடம் சிறப்புரையாற்றினார். 

மேலும் இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் வந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்து மாவட்ட  செயலாளரை சந்தித்தனர் மாவட்ட செயலாளர்.சுகுமார் அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவித்தார். மாவட்ட பிரதிநிதி நவல்பூர் அஸ்லம் அவர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு பானையில் அதிமுக மற்றும் மாவட்ட செயலாளர். ஆகியோர் உருவப்படம் போட்ட பானையை மாவட்ட செயலாளரிடம் பரிசாக அளித்தார். அப்போது வந்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு காலை சிற்றுண்டி வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர். மணி மாவட்ட பொருளாளர் கலவை. அப்துல்லா மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர். உமர் பாரூக் , மாவட்ட மாணவரணி செயலாளர். விஜய் ஆனந்த் மகளிர் அமைப்பினர் முன்னாள் நகர மன்ற தலைவர். சித்ரா சந்தோசம், ராதிகா, ஜோதி சேதுராமன், மற்றும் அதிமுக நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஏராளமான பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!