நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள செந்துறை ஊராட்சி சார்பில் அங்குள்ள மந்தை முத்தாலம்மன் கோயில் முன் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதற்கு திமுக வடக்கு ஒன்றியச் செயலர் பழனிச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 

இதையொட்டி கரும்புகளால் தோரணங்கள் கட்டப்பட்டு அடுப்புகள் கூட்டி புதிய பானையில் பொங் கல்வைத்தனர். பொங்கல் பொங்கி வரும் போது குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் பெண்களுக்கு கோலம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஊராட்சி செயலர் கருப்பையா அனைவரையும் வரவேற்றார். இதில்  திமுக நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, குமரன், மதியரசு, அயூப், சேகர், பாலு, துரை உள்பட ஊராட்சியைச் சேர்ந்த  பெண்கள் உட்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைப் போலவே குடகிப்பட்டி ஊராட்சியில் நடந்த விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஊராட்சி செயலர் செல்வராஜ் வரவேற்றார்.  மேலும் நத்தம் ஒன்றிய அலுவலக வளாகம் மற்றும் ஒவ்வொரு ஊராட்சியிலும் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் ஒன்றிய ஆணையாளர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரவீந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்க மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகிக்க ஊராட்சி செயலர்கள், அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!