தூய்மை பணியாளர்கள் மனித தெய்வங்கள் –நலத்திட்டங்களை முழுமையாக பெற்றுத் தருவேன் :வாரிய தலைவர் டாக்டர். திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி!!

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், தாட்கோ மற்றும் மேல்விஷாரா நகராட்சி – தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மேல்விஷாரா நகர மன்ற தலைவர் குல்சார் அகமத் தலைமை தாங்கினார்.

நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

உரையாற்றிய டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி,“நகரம் சுத்தமாக இருக்கிறதென்றால் அதற்கான முழுப் பெருமையும் தூய்மை பணியாளர்களுக்கே சேரும்.

நீங்கள் சாதாரண தொழில் செய்யவில்லை; மனித உயிர்களை பாதுகாக்கும் உயர்ந்த பணியை செய்கிறீர்கள்.

நீங்கள் எங்களுக்கெல்லாம் மனித தெய்வங்கள்,”என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.தூய்மைபணியாளர்களிடம்,மாத சம்பளம் முறையாகவழங்கப்படுகிறதா?கையுறை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா?

என நேரடியாககேட்டறிந்தார்.மேலும், “பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றக் கூடாது.ஒருமுறை பயன்படுத்தி அகற்றக்கூடிய கையுறைகள் வழங்கப்பட வேண்டும்,”என நகராட்சி நிர்வாகத்திடம் வலியுதினார்!

நல வாரிய அடையாள அட்டை அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் கிடைக்கச் செய்வேன் என்றும்,

அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம்,

வரும் 20-ம் தேதிக்குள் நடைமுறைக்கு வரும் என மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்தார்.

“காலை 6 மணிக்கு வேலைக்கு வந்து, மதியம் சமைத்து சாப்பிடுவது கடினம்.இந்த சிரமத்தை புரிந்த ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள்,”என்று பாராட்டினார்.

குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக வழங்கப்பட வேண்டும்தனியார்மயத்தை தவிர்த்து நகராட்சி நிர்வாகமே பணிகளை மேற்கொள்ள வேண்டும்

நிரந்தர பணிநியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரடியாக முன்வைப்பேன் என்றும் தெரிவித்தார்.

“இந்த தொழில் உங்களோடு நிற்கட்டும்;உங்கள் குழந்தைகள் கல்வி மூலம் உயர வேண்டும்,”என்று தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர். ஜப்பார் அகமத்,நகர மன்ற உறுப்பினர்கள்,நகராட்சி அலுவலர்கள்,தூய்மை பணியாளர்கள்,நகர மன்ற ஊழியர்கள்உள்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!