உத்தரகோசமங்கை மங்களநாதர் திருக்கோயிலில் நேற்று மரகதநடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு மீண்டும் இன்று அதிகாலை மீண்டும் புதிய சந்தனக்காப்பு!!

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் இன்று காலை மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு அபிேஷகங்களும், தொடர்ந்து 24 மணி நேரம் நாட்டியாஞ்சலியும் நடக்கிறது. உலகின் முதல் சிவன் கோயில் என்றழைக்கப்படும் மங்களநாதர் சுவாமி கோயிலின் வடக்கே மரகத நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு டிச.,25ல் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8:30 மணிக்கு மரகத நடராஜருக்கு பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு காலை 8:45 மணி முதல் தொடர்ந்து 32 வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. 

இரவு 10:00 மணிக்கு கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளி பூஜைகள் நடக்கிறது. நாளை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 1:00 முதல் 2:00 மணிக்குள் மீண்டும் ஆருத்ரா மகா அபிஷேகங்களுக்கு பின்னர் புதிய சந்தனம் மரகத நடராஜர் சிலையில் சாத்தப்பட்டு அலங்காரத்தில் பூஜைகள் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் வீதியுலா, மாலை 5:00மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிேஷகம், இரவு 8:00மணிக்கு மாணிக்கவாசக சுவாமிகளுக்கு .காட்சியளித்து தீபாராதனை நடக்கிறது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!