திராவிட கழக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா!!
கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் திராவிட பொங்கல் விழா!
கடலூர் மாவட்டம்,நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் திராவிட பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர். துரை சந்திரசேகரன் மாவட்ட திராவிடர் கழக தலைவர். தண்டபாணி மாவட்ட துணை தலைவர். மணிவேல் பொதுக்குழு உறுப்பினர். தாமோதரன் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள். முனியம்மாள், தமிழ் ஏந்தி ,குணசுந்தரி, கலைச்செல்வி, கீதா, சுமலதா, திராவிட மணி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பெரியார் செல்வம் இளைஞர் அணி மாவட்ட தலைவர். உதயசங்கர் செயலாளர். ராமநாதன் நூலகர். கண்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பித்தனர். பொங்கல் விழா சிறப்புகளை முழக்கமாக எழுப்பினர். செங்கரும்பும் புது பானையும் மஞ்சள் கொத்தும் சர்க்கரை பொங்கல் இட்டு பொங்கலோ பொங்கல் திராவிட பொங்கல் சமத்துவ பொங்கல் தமிழர் ஒற்றுமை காட்டும் பொங்கல் திராவிட மாடல் ஆட்சியின் மாண்பை எடுத்தியம்பும் பொங்கல் என்று முழக்கமிட்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக