கன்னியாகுமரி பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா!!
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பகுதியில் அமைந்துள்ள ரிங்கள்தெளபெ பள்ளியில் நடைபெற்ற நாட்டின் 77 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாநில தலைவரும் நிறுவனருமான டாக்டர். P. சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன்பின் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர். ஜெரோம் எமில், தலைமை ஆசிரியை. புஷ்பலதா, உடற்கல்வி ஆசிரியர். ஸ்டீபன் மற்றும் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் நிர்வாகிகள். நாராயணன், அருள் செல்வன், சாமுவேல்,ஆல்வின் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.




கருத்துகள்
கருத்துரையிடுக