நெமிலி அருகே ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார்! அமைச்சர் ஆர். காந்தி!!
ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நெமிலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ரெட்டிவலம் டிபிசி வளாகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன் அவர்கள் தலைமையில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, சோளிங்கர் மேற்கு, மத்திய,வடக்கு ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.ரவிந்திரன், SGC.பெருமாள், எஸ்.மணிவண்ணன், பனப்பாக்கம் பேரூர் செயலாளர். N.R.சீனிவாசன் மற்றும் ஒன்றிய பேரூர் நிர்வாகிகளிடம் பொங்கல் தொகுப்பு மற்றும் காலண்டர் வழங்கி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் மு.சிவானந்தம் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி




கருத்துகள்
கருத்துரையிடுக