நெமிலி அருகே கோடம்பாக்கம் மற்றும் வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டம்! ஆர்.பி ரவீந்திரன் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வாக்கு சாவடிகளை பலப்படுத்தும் விதமாக நெமிலி தெற்கு ஒன்றிய கழக செயலாளர். ஆர்.பி ரவீந்திரன் அவர்கள் தலைமையில் நெமிலி தெற்கு ஒன்றிய திமுகவிற்கு உட்பட்ட வாக்கு சாவடிகளான கோடம்பாக்கம் 163, வெளிதாங்கபுரம்169 ஆகிய இரு வாக்குச்சாவடிகளின் பொறுப்பாளர்களான கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், BLA2, BDA, BLC ஆகியோர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர். அ. அசோகன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் நெமிலி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர். என்.பிரகாஷ், நெமிலி தெற்கு ஒன்றிய பொருளாளர். செல்வம், நெமிலி தெற்கு ஒன்றிய கழக துணை செயலாளர்கள். தீனதயாளன், முரளி, மாவட்ட கவுன்சிலர். ராஜா பொன்னையன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், கிளைக் கழகச் செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், BLA2, BDA, BLC மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி



கருத்துகள்
கருத்துரையிடுக