சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டியது திருமயம் மலைக்கோட்டை!!


 புதுக்கோட்டை மாவட்டம்,சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டியது திருமயம் மலைக்கோட்டை. நேற்று 600க்கும் அதிகமான உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து கண்கவர்  கோட்டையின்  அழகை பார்த்து ரசித்தனர். இங்குள்ள ஆயுத குடோன்,பீரங்கிகள்,வற்றாத சுனை, சமணர் படுகைகள்,கல்வெட்டுக்கள், மலையில் குடைவரையில்  உள்ள சிவலிங்கம் ஆகியவற்றை பார்த்து மகிழ்ந்தனர். ஐயப்பன்கோயில்,ஆதிபராசக்தி,சமயபுரம் மாரியம்மன்  கோயில்களுக்குசென்று திரும்பும் பக்தர்கள்  இங்குள்ள சிவலிங்கத்தை தரிசித்துச்சென்றனர். ஏராளமான காதல் ஜோடிகளும்  பாறை இடுக்குகளில் தங்கி  கோட்டையின் அழகை,அதன் சுற்றுப்புறங்களில. உள்ள  இயற்கை காட்சிகளை  பார்த்து மகிழ்ந்தனர். குறிப்பாக கடியாபட்டி தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ள வெளிநாட்டுப்பயணிகளும்  நேற்று கோட்டைக்கு வந்திருந்தனர். இதையடுத்து அப்பகுதியில்  தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பயணிகளுக்கு தேவையான குடிநீர்,சுகாதார வசதிகளை இந்திய அரசின் தொல்லியல் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!