புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற குடியரசு தின விழா!!

புதுக்கோட்டைமாவட்டம்,புதுக்கோட்டை  டீம்  ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் 77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு டீம்  ஸ்பெஷாலிட்டி  மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கே.எச்.சலீம் அவர்கள் வழிகாட்டுதலின் படி, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் R.அனிதா தனசேகரன் அவர்கள் தலைமை தாங்கி அனைவரையும்  வரவேற்றார். சிறப்பு விருந்தினரான எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் O.ரவிநாதன்  மற்றும் பொது அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் சலீம் அப்துல் குத்தூஸ் அவர்களும்   தேசிய கொடியேற்றி, குடியரசு ஆன இந்த பொன்னாளில் தியாகத்தையும்  தேச ஒற்றுமையும் மத நல்லிணக்கத்தையும் காத்திடுவோம் என்று சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் முகமது கனி, மருத்துவர். அரவிந்த்,மருத்துவர் புவனேஸ்வரி, செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.மருத்துவமனை மேலாளர் சத்தியசீலன் நன்றியுரை கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!