கோசு குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோசு குறிச்சியில் அரசு மேனிலை பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. இதற்கு திமுக வடக்கு ஒன்றிய செயலர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றியச் செயலர் ரத்தினக்குமார்முன்னிலை வகித்தார். வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமையாசிரியர் சுரேஷ் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்  ஆண்டிஅம்பலம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதில் வடக்கு ஒன்றிய திமுக பொருளாளர் கலிபுல்லா, கிளைச் செயலாளர் அபுபக்கர், தொழில் நுட்ப அணி ரீகன் பிரபு நிர்வாகிகள் தேன் சேகர், யாசின், ரமேஷ், கணேசன், ரஞ்சித் உள்பட பள்ளி ஆசிரிய - ஆசிரியைகள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில்  90 மாணவர்கள் பயன்பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!