திருமலைக்கேணியில் தை அமாவாசை விழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத அமாவாசை விழா நடைபெற்றது. இதையொட்டி சுற்று வட்டாரங்களிலிருந்தும்,வெளி மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நெய்விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. இராஜாங்க திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.
இதைபோலவே சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டி வரசித்தி வராஹி அம்மன் கோயிலில் தை மாத அம்மாவாசையையொட்டி நடந்த யாக பூஜையில் திரளான கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நத்தம் மாரியம்மன் கோயில் மற்றும் கைலாசநாதர் கோயிலில், அமாவாசையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக