தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெற்றி பெற சிறப்பு வேண்டுதல் மற்றும் சிறப்பு பூஜைகள்!!
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர் தளபதி. விஜய் அவர்களுடைய நல்லாசியுடன்,பொதுச்செயலாளர். புஸ்ஸி.N.ஆனந்த் அவர்களுடைய வழிகாட்டுதலின் படியும்,தமிழக வெற்றிக்கழகம் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் சேவைச் செம்மல் டாக்டர்.லெப்ட்.V.பாண்டி அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக வெற்றிக்கழகம் கடமலை மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் .R.T.ஆனந்த பாண்டியன் அவர்களுடைய வழிகாட்டுதலின் படி
கண்டமனூர் காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ கோட்டைக் கருப்பசாமி திருக்கோவில் தன்னில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நடைபெறும் உழவுக்கும்,உழவனுக்கும் உற்ற நண்பனாக விளங்கும் காளைகளை போற்றிவணங்கும் பாரம்பரிய விழாவில் கண்டமனூர் தமிழக வெற்றிக்கழகம் கிளைச் செயலாளர்.M.P.நாகராஜன் தலைமையில் கண்டமனூர் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அருள்மிகுஸ்ரீ கோட்டைக் கருப்பசாமி திருக்கோவிலில் மக்கள் விரும்பும் முதல்வர்; தளபதி. விஜய் முதல்வராக வேண்டி அருள்மிகுஸ்ரீகோட்டைக் கருப்பசாமியை வேண்டிக் கொண்டு தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக