நத்தம் காவல் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலையத்தில் ஆய்வாளர். பொன்.குணசேகரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

காவலா்கள் அனைவரும்  ஒரே மாதிரியாக பாரம்பரியமான வேஷ்டி சட்டை  அணிந்தும், பெண் காவலா்கள் சேலை அணிந்தும் கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து அலங்ரிக்கப்பட்ட பொங்கல் பானையில் பொங்கல் வைத்து குலவை சத்தமிட்டு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனா்.

தொடா்ந்து ஒருவருக்கு ஒருவா் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியைவெளிப்படுத்தினா். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், கிருஷ்ணகுமார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!