திண்டுக்கல்லில் தங்க நகை பட்டறை தொழிலாளி ஆசிட் குடித்து தற்கொலை!!

திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த நடேசன் மகன் கோபிநாதன்(48) இவர் தங்க நகை செய்யும் தொழிலாளி ஆவார்.

இந்நிலையில் இவர் பழைய பார்வதி துணிக்கடை அருகே உள்ள நகை பட்டறையில் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் கோபிநாதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக கோபிநாதன் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!