கருவறையில் தாய்மார்களும், வகுப்பறையில் ஆசிரியர்களுமே, ஆகச்சிறந்த மாணவர்களை உருவாக்குகின்றார்கள். திரைக்கலைஞர் டாக்டர் தாமு பேச்சு!!
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குநர் ரா. சுதர்சன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் அவர்களின் சீடர் திரைக்கலைஞர், கல்விச்சேவைக்காக ராஷ்டிரிய சிக்க்ஷா புரஸ்கர் விருது பெற்ற டாக்டர் தாமு கலந்துகொண்டு
எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வியில் முதல் ஐந்து இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளை தாமு வழங்கினார். திருக்குறள் ஒப்புவித்து வெற்றிப்பெற்ற எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்களுக்கு பரிசுகளும், நூல்களும் வழங்கி பாராட்டினார். அவர் பேசும்போது ”தாய்மார்கள் பத்து மாதமும் கண்ணும் கருத்துமாக கவனித்து கருவறையிலிருந்து பிள்ளையை பெற்றெடுக்கிறார்கள். ஆசிரியர்கள் பத்து ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக வகுப்பறையில் வளர்த்தெடுக்கிறார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து சொக்கத்தங்கமான மாணவர்களை சமூகத்தில் உலவவிடுகிறீர்கள். அதனால் தான் பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தியின் மாணவர்கள் ஆபரணத் தங்கமாக ஜொலிக்கிறார்கள்.
இங்கே கணபதி பாடல் பாடிய குழந்தைகளெல்லாம் எனக்கு பிள்ளையாராகவே தெரிந்தார்கள். பரிசு பெற்ற எல்லா குழந்தைகளிலும் கலாம் அய்யாவின் சாயலையே கண்டேன். மாணவர்களை செதுக்கிய ஆசிரியர்களுக்கும் அரவணைக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார். முன்னதாக பள்ளியின் இயக்குநர் ரா.சுதர்சன் வரவேற்புரை வழங்கினார். நிறைவாக ஒருங்கிணைப்பாளர் வரலெட்சுமி நன்றி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக