நத்தம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு முகாம்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் மற்றும் வருவாய்த் துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்தது.

இதற்கு கல்லூரி முதல்வர் ராஜாராம் தலைமை தாங்கினார். இதில் வட்டாட்சியர்  பாண்டியராஜன் கலந்து கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும், வாக்களிப்பது ஜனநாயக் கடமை என்பது குறித்தும் மாணவர்களிடம் விளக்கிக் கூறினர். மேலும் வாக்காளர் பட்டியல்  சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் மூலம் எவ்வாறு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  முன்னதாக தரவு அறிவியல் துறைத் தலைவர். சுகன்யா அனைவரையும் வரவேற்றார். இதில்  தேர்தல் துணை வட்டாட்சியர்  சரவணன், வருவாய் ஆய்வாளர் துர்கா, கிராம நிர்வாக அலுவலர் முத்து உள்ளிட்ட வருவாய்த் துறையினர், மாணவ - மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கெளரவ விரிவுரையாளர் உஷா நன்றி கூறினார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!