நத்தம் பேரூராட்சியில் நடைபெற்ற மன்றக் கூட்டம்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் விஜயநாத், துணைத் தலைவர் மகேஷ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் பிரசாத் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் வரவு - செலவு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மன்ற உறுப்பினர்கள். இஸ்மாயில், பழனிக்குமார், கண்ணன் மாரிமுத்து, விஜயவீரன், சர்புதீன், வசந்த சுஜாதா, ராதிகா, கலாவதி, உசேன் பரிதா உள்பட அனைத்து கவுன்சிலர்கள், தூய்மைப் பணி ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உள்ளிட்ட பேருராட்சி பணியாளர், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக