மதர் தெரசா செவிலியர் கல்லூரியின் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்பு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டு சாலையில் உள்ள மதர் தெரசா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலிய மாணவிகள் உறுதியேற்பு விழா இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதர் தெரசா கல்வி நிறுவனத்தின் நிறுவனர்ர்.இரா. சின்னதம்பி தலைமை தாங்கினார். தாளாளர்.ஆர் .சி உதயகுமார் முன்னிலை வகித்தார். முதன்மை விருந்தினராக தமிழ்நாடு அரசின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் பங்கேற்றார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி GVN மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். கே. கோவிந்தராஜ் மற்றும் புதுக்கோட்டை
முத்து மீனாட்சி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். ஜி. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது விளக்குகளை ஏற்றி செவிலியர் உறுதி மொழியை ஏற்றனர். செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் J. சுகந்தி அவர்கள் உறுதிமொழியை வழிமொழித்தார். நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் . பூங்குன்றன் பதிவாளர். மு. தினேஷ்குமார் மற்றும் செவிலிய மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர். ஃபுளோரா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விழா நிறைவில் துணை பேராசிரியர். பிரியாதர்ஷினி நன்றியுரை வழங்கினார். பேராசிரியர். லீமா மேரி மற்றும் துணை பேராசிரியர். மங்களேஸ்வரி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக