கோகோ போட்டியில் தங்கம் வென்ற நத்தம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் துரைக்கமலம் அரசுப் பள்ளி சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களை அப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

டெல்லியில் தேசிய அளவிலான கோகோ போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் போட்டியில் கலந்து கொண்டன. இதில் நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தனபால், யோகேஷ், விஷ்வா, மாயக் கிருஷ்ணன் ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் பெற்றனர். மேலும் அளவில் நடந்த போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்தனர். இவ்வாறு தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் உள்ளிட்டோர் பாராட்டி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!