காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு!!
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் அழகு முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே தனியார் நகை அடகுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் முன்பு வெள்ளிக்கிழமை காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் படுத்திருந்தார்அப்பகுதி மக்கள் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மூன்று தினங்களாக சாணார்பட்டி அருகேயுள்ள கோணபட்டியில் பகுதியில் சுற்றி திரிந்த வடமாநில வாலிபர் என தெரியவந்தது. அவர் நகை அடகு கடையில் திருட வந்தவராக இருக்கலாம் என சந்தேகம் அடைந்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திடீரென அவர் காவல் நிலைய மொட்டை மாடியில் ஏறி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூச்சலிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுமார் 1 மணிநேரம் போராடி வலைவிரித்து பிடிக்க முயற்சித்தனர். பின்னர் ஒருவழியாக மாடிக்கே சென்று அவரை கீழே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோவிந்த் கல்சா (35) தெரியவந்தது.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக திருப்பூருக்கு வந்த இவருக்கு இருப்பிடம் கிடைக்கவில்லை. பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல பணமும் இல்லை. இதனால் அங்கிருந்து திண்டுக்கல் வந்த இவர் தனது உறவினர்களை தேடி
உள்ளார். கோபால்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் வடமாநில் வாலிபர்கள் வியாபாரம் செய்து வருவதால் அங்கு வந்திருக்கலாம் என தெரியவந் ந்தது. இதனையடுத்து போலீஸார் அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து ஈரோட்டில் இருந்து ரயில் பயண சீட்டு எடுத்து ஒடிசாவில் உள்ள சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக