அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகள் தமிழர் திருநாளைச் சமத்துவப் பொங்கல் திருநாளாக அதி விமரிசையாகக் கொண்டாடினர். கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்தனர். விழாவினை தமிழ்த் துறைத் தலைவர் வரலாற்று ஆய்வாளர் முனைவர் காளிதாஸ் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக