புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நமது புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் கிங்ஸ்லி அருண்ராஜ் அவர்கள் முன்னிலையில், மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். K. H. சலீம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இருதய நல சிறப்பு மருத்துவர். வெங்கடேசன், குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர். வெங்கட்ராமன் அவர்களும் , மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவர். அலமேலு வர்ஷா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வில், இருக்கை மருத்துவர். தர்மராஜ், மருத்துவர். புவனேஸ்வரி , மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இறுதியில் மருத்துவமனை மேலாளர். சத்தியசீலன் அவர்கள் நன்றியுரை கூறினார் .நிகழ்ச்சியை உணவியல் நிபுணர்.மஹாலட்சுமி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக