உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சர். சி.வே. கணேசன்!!

கடலூர் மாவட்டம்,“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம், திட்டக்குடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 326 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர். சி.வெ.கணேசன் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர். மணிகண்டன், ஒன்றிய செயலாளர். பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், நகர செயலாளர். விபிபி பரமகுரு, கவுன்சிலர். கொளஞ்சியப்பன், அயலக அணி மாவட்ட அமைப்பாளர். சேதுராமன், ஆசிரியர்கள், கட்சியினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!