மணக்காட்டூரில் பூக்குழி இறங்கி சபரிமலை யாத்திரை தொடங்கிய ஐய்யப்ப பக்தர்கள்!!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகேயுள்ள மணக்காட்டூரில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி 1-அம் தேதி பூக்குழி இறங்கி சபரிமலை யாத்திரையை பக்தர்கள் தொடங்குவர். இதையொட்டி இக்கோயிலில் கடந்த 29-ஆம் தேதி அய்யனார் கோயில் தீர்த்தம் எடுத்து வந்து கிராம தெய்வங்களுக்கு கனி மாற்றுதல் நடந்தது. மறுநாள் தோரணம் கட்டுதலை தொடர்ந்து 30-ஆம் தேதியன்று அதிகாலை இருமுடி கட்டுதல் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர் தேர்பவனி நடந்தது. வியாழன்கிழமை கோயிலின் முன் பூ வளர்க்கப்பட்டு அதில் ஐய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி யாத்திரையை தொடங்கினர். இதற்கான ஏற்பாடுகளை குருசாமி தலைமையில் ஐயப்பபக்தர்கள் , நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக